எங்களை பற்றி

தொலைநோக்கு பார்வை

நீதியும் சமத்துவமும் நிறைந்த சமுதாயம் அமைப்போம்

நோக்கம்

1

மிகப்பெரிய ஜனநாயக மக்கள் இயக்கத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துதல்.

2

ஆட்சியில் குடிமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம், ஜனநாயகத்தின் தூண்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பினை மற்றும் அதிகார ஏற்றத்தாழ்வை ஒழித்தல்.

3

அரசு அமைக்கும் சட்ட திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பரிந்துரை குழுவாக செயல்படுதல்.

4

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை உறுதி செய்தல்.

5

காவல் துறை, தேர்தல் துறை, நீதித்துறை மற்றும் பிற துறை சீர்திருத்தங்கள் நோக்கி செயல்படுதல்.

6

பொதுப் பிரச்சினைகள் குறித்து குடி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் உரிமையை நிலைநாட்டல்.

7

சாதி அநீதியை அழிப்பது, மற்றும் அனைத்து மதங்களிடையே யும் சாதியற்ற சமூகம் உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுவது.

8

மதச்சார்பற்ற சமூகம் மற்றும் மதசார்பற்ற அரசாங்கத்தை நோக்கி செயல்படுதல்.

9

சுற்றுச்சூழலை பாதிக்காத, வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்கள் நோக்கிச் செயல்படுதல்.

அறப்போர் என்றால் ‘அறத்திற்காக அறவழியில் போரிடுவது ‘ அல்லது ‘அகிம்சை போர்’ என கூறலாம். அறப்போர் இயக்கம், நீதியும் சமத்துவமும் நிறைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்கும் ஒரு மக்கள் இயக்கமாகும். அறப்போர் இயக்கத்தின் தற்போதைய கவனமானது அரசு இயந்திரத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைத்தன்மையை நிலைநாட்டுவது மற்றும், மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தை அமைப்பதாகும். 

 

அறப்போர்  இயக்கம் இந்திய அரசியலமைப்பு , அதன் கொள்கைகள் , மற்றும் சட்டங்கள் 

ஆகியவற்றை உறுதியாக நம்புகிறது. கண்ணியத்துடனும், சகோதரத்துவத்துடனும், சுதந்திரத்துடனும் வாழக்கூடிய இந்திய தேசம் என்ற நமது அரசியலமைப்பின் தாத்பரியம், அறப்போர் இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு மூலமாக இருக்கிறது. இதன் நோக்கிலிருந்து  நமது முன்னெடுப்புகள் நமது நடவடிக்கைகள் முதலாவதாக சட்டத்தின் ஆட்சிக்கு உட்படும் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளை கவனத்தில் கொண்டு பொறுப்புணர்வோடு செயல்படும். 

 

நமது  சமூகத்தின் சமூக நீதி மற்றும் பொருளாதார நலனை பாதுகாக்கும் நோக்கத்துடன் மட்டுமே அறப்போர் செயல்படுகிறது. அரசு ஊழியர்கள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது போல நாமும் முழுமையாக சட்டத்திற்குட்பட்டு நடப்பது நமது கடமை என கருதுகிறோம்.

முதன்மை குழு

ஜெயராம் வெங்கடேசன்

ஒருங்கிணைப்பாளர்

ஜாகிர் ஹுசைன்

இணை ஒருங்கிணைப்பாளர்