அறப்போர் கொடுத்த 30 புகாரில் பெரும்பாலும் லஞ்ச ஒழிப்பு துறையில் தான் உள்ளது அல்லது FIR/ விசாரணை முன் அனுமதிக்காக தமிழ்நாடு அரசிடம் உள்ளது. அறப்போர் புகாரில் நமக்கு தெரிந்து கே.சி.வீரமணி மீதான குற்றப்பத்திரிகைக்கான அனுமதி மட்டுமே கவர்னர் ரவி அவர்களிடம் தூங்கி கொண்டு உள்ளது. அதிகாரிகளுக்கு அனுமதி தர வேண்டியது மாநில அரசு தான். தற்போதைய MLA க்களுக்கு அனுமதி தருவது மாநில அரசு தான். அமைச்சராக இருந்தால் மட்டும் தான் அது கவர்னருக்கு செல்லும்.
கே பி பார்க் ஊழல், ஸ்மார்ட் சிட்டி ஊழல், தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில் ஊழல், பஸ் ஷெல்டர் ஊழல், நெடுஞ்சாலை ஊழல் என பல ஊழல்களில் FIR போடாமல் தடுத்து நிறுத்துவது முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அரசே! கிறிஸ்டி ரேஷன் ஊழல் , அதானி நிலக்கரி ஊழல், கல் குவாரி ஊழல், அண்ணா பல்கலைக்கழக ஊழல் என பல ஊழல்களில் FIR போட அனுமதி கூட கேட்காமல் விசாரணையை மாத வருட கணக்கில் இழுத்தடிப்பது லஞ்ச ஒழிப்பு துறை!
சென்னை கோவை மாநகராட்சி ஊழல் மீதான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறை மீது அறப்போர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்து நீதிமன்றம் 2 வாரங்களுக்குள் செய்ய சொன்ன பிறகும், இது நடந்து 4 மாதங்கள் ஆகியும் இன்று வரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து முடிக்கப்படவில்லை.
எனவே பெரும்பாலான புகார்களை FIR போடாமல் மூடி மறைக்க வேலை செய்யும் லஞ்ச ஒழிப்பு துறையையும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசையும் வலுவாக கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது ! ஊழலுடன் சமரசம் செய்யும் லஞ்ச ஒழிப்பு துறையை தூக்கத்தில் இருந்து எழுப்புவோம் ! வருகிற ஞாயிறு மாலை 5 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில் சந்திப்போம்.
முகவரி – 7, 2nd Floor, Dr Thirumoorthy Nagar Main Rd, Nungambakkam, Chennai.
Arappor Office Location – https://maps.app.goo.gl/vAExrimU4jy5sQ