Anna University Affiliated Colleges Faculty Scam


அறப்போர் பத்திரிக்கை செய்தி

 

நூற்றுகணக்கான கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரத்தில் மாபெரும் மோசடி 

அண்ணா பல்கலைக் கழகத்தின் CAI (Affiliation பிரிவு – Inspection Committee), கடந்த 2023-24 கல்வியாண்டில் தகுதியற்ற நூற்றுக்கணக்கான கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து மோசடி செய்துள்ளனர். 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் முழு நேர பேராசிரியர்களாக வேலை செய்வதாக அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகரித்து மோசடி செய்துள்ளது.. இது போன்று 972 முழுநேர பேராசியர் இடங்கள் மோசடியாக நிரப்பியதை அங்கீகரித்து மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஒரே முழு நேர பேராசிரியர் பல கல்லூரிகளில் இருப்பது மொத்தமாக 224 கல்லூரிகளில் நடந்துள்ளது. எனவே அந்த 2023-24இல் குழுவை ஏற்படுத்தி ஆய்வை மேற்கொண்ட அப்போதைய CAI இயக்குநர் திரு.A.இளையபெருமாள், Inspection Committee உறுப்பினர்கள், 224 கல்லூரி நிர்வாகிகள், 353 பேராசிரியர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும் என்று அறப்போர் இயக்கம் இன்றைய தினம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், ஆளுநர் திரு R.N.ரவி அவர்களுக்கும், தலைமைச்செயலர் திரு.சிவதாஸ் மீனா அவர்களுக்கும், உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்களுக்கும், உயர்கல்வித்துறை செயலர் திரு.பிரதீப் யாதவ் IAS அவர்களுக்கும் புகார்  அனுப்பியுள்ளது.

இது போன்ற மோசடி தொடராமல் இருக்க, 2023-24 Inspection மேற்கொண்ட அந்த குழுவினர் விசாரிக்கபடவேண்டும், செய்த மோசடிக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரி அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திரு Dr.R.வேல்ராஜ் அவர்களுக்கும், Syndicate Member திரு I பரந்தாமன் அவர்களுக்கும் மனு அனுப்பியுள்ளது. ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான அவர்களுக்கும், மற்றும் செயலர் திரு லட்சுமிநாராயண் மிஸ்ரா IAS மற்றும் AICTE – Chairman திரு.T.G சீதாராம் அவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

Watch Full Video in YouTube. Click the video below.

மோசடி விவரம் :

அண்ணா பல்கலைக்கழகம் (CAI பிரிவு – Inspection Committee) ஆண்டு தோறும், தமிழ்நாட்டில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரிகளை நேரடி ஆய்வு செய்கிறது. அந்த ஆய்வில் கல்லூரிகளின் பேராசியர்களின் எண்ணிக்கை, அவர்களின் கல்வித்தகுதி மற்றும் மாணவர்களுக்கான செய்முறை பரிசோதனை கூடம் போன்றவற்றின் உட்கட்டமைப்பு பொறுத்தே அந்தந்த கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குகிறது.

 

ஒவ்வொரு படிப்புக்கும் கல்லூரியில் இருக்க வேண்டிய கட்டமைப்பை AICTE (All India Council for Technical Education) வகுத்துள்ளது, அந்த விதிமுறைகளை கொண்டே அண்ணா பல்கலைக்கழகம் நேரடி ஆய்வு மேற்கொள்கிறது. அந்த கட்டமைப்பு பொறுத்தே கல்லூரிகளில், பல்வேறு படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை அனுமதிக்கப்படும்.

 

ஒரு கல்லூரியின் முழுநேர பேராசிரியர், ஒரே நேரத்தில் மற்றொரு கல்லூரியில் முழுநேர பேராசியராக பணிபுரிய முடியாது, அப்படி பணி புரிந்தால் மோசடி என்று AICTE கூறுகிறது. சிறப்பு பேராசிரியர்கள் (Guest Lecture) முழுநேர பேராசிரியர்கள் அல்ல. ஒரு கல்லூரியில் பணிபுரியும் முழுநேர பேராசிரியர் மற்றும் முனைவர்கள் (Phd) எண்ணிக்கை பொறுத்தே அந்த கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கும், அந்த பாடபிரிவுகளுக்கான மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கைக்கும் அனுமதி அளிக்கப்படும். இதை உறுதி செய்யவே அண்ணா பல்கலை கழகம் (CAI பிரிவு – Inspection Committee) ஆண்டு தோறும், தமிழ்நாட்டில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரிகளை நேரடி ஆய்வு செய்கிறது.

அ) போலியான முழுநேர பேராசிரியர்கள் :

2023-24இல் அங்கீகரிப்பட்ட கல்லூரிகள் மற்றும் அங்கு பணிபுரியும் பேராசிரியர் விபரங்களை அண்ணா பல்கலை கழகத்தின் இணையதளத்தில் இருந்து இறக்குமதி செய்து ஆய்வு மேற்கொண்டத்தில் 353 பேராசியர்கள், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழுநேர பேராசியராக உள்ளனர் என்ற தரவை அறிய முடிந்தது. (இணைப்பு 1)


அந்த தரவுகளின் அடிப்படையில் அதிகபட்சம்,


1. DR. S. MARICHAMY – 03/06/80 மற்றும் DR. K. MURALIBABU – 05/06/80 ஆகிய இரு பேராசிரியர்கள் தலா 11 கல்லூரியில், நேரடியாக ஒரே நேரத்தில், வேறு வேறு மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கின்றனர் என்பது அதிர்ச்சியான செய்தி . (இணைப்பு 2)


2. DR. S. VENKATESAN – 21/01/76, MR. M. ARANGARAJAN – 07/06/81 மற்றும் DR. S. VASANTHA SWAMINATHAN – 10/07/81 ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் தலா 10 கல்லூரியில், நேரடியாக வேறு வேறு மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கின்றனர்.


இது போன்று 353 முழுநேர பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழுநேர பேராசிரியர்களாக பணி புரிகின்றனர். அப்படி பொய்யாக நிரப்பப்பட்ட முழுநேர பேராசிரியர்கள் பணி இடத்தின் எண்ணிக்கை 972. இந்த போலி பேராசிரியர்கள் 224 கல்லூரிகளில் முழுநேர பேராசிரியர்களாக பணி புரிகின்றனர்,


இதை மறைத்து அண்ணா பல்கலை கழகத்தின் Inspection Committee அங்கீகாரம் வழங்கியுள்ளது. கீழே சில உதாரணங்கள்:


(Download the Complaint for Full List.)

ஆ) அண்ணா பல்கலை கழகமும் (Inspection Committee), கல்லூரி நிர்வாகமும் கூட்டுச்சதி:


அண்ணா பல்கலைக்கழகத்தின் குழு 2023-24இல் கல்லூரிகளுக்கு நேரடி ஆய்வுக்கு சென்ற தேதி விபரங்களை RTI மூலம் பெற்றோம்,(இணைப்பு 4)


1. 02.06.2023 அன்று ஒரே நாளில், Sree Sastha Institute of Engineering and Technology,Chembarambakkam மற்றும் Sree Krishna College of Engineering,Vellore ஆகிய இரு கல்லூரிகளுக்கு ஆய்வு குழு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த இரு கல்லூரிகளில் Mr.R. RAMKUMAR (DOB : 10-05-1992) என்ற பேராசிரியர் முழுநேர பேராசிரியராக மாணவர்களுக்கு உள்ளதாக அந்த கல்லூரி தெரிவித்துள்ளதை இரு கல்லூரிகளுக்கும் சென்ற ஆய்வுக்குழு எப்படி ஒப்புக்கொண்டனர் ??


2. 26.05.2023 அன்று ஒரே நாளில், PPG Institute of Technology, Coimbatore மற்றும் Mohamed Sathak Engineering College,Ramanathapuram ஆகிய இரு கல்லூரிகளுக்கு ஆய்வு குழு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த இரு கல்லூரிகளில் DR. R. BABU (08-06-1979) என்ற பேராசிரியர் முழுநேர பேராசிரியராக மாணவர்களுக்கு உள்ளதாக அந்த கல்லூரி தெரிவித்துள்ளதை இரு கல்லூரிகளுக்கும் சென்ற ஆய்வுக்குழு எப்படி ஒப்புக்கொண்டனர்??


மேலும் இது போன்று ஒரே நாளில் ஆய்வுக்குழு சென்ற பொழுது ஒரே நபர் 2 கல்லூர்கிளில் முழுநேர பேராசிரியர்களாக வேலை செய்ததாக ஆய்வு குழு அங்கீகரித்த பட்டியல் இணைப்பு 5 இல்.


(Download the Complaint for Full List.)

இ) மற்ற கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியர்கள் எத்தனை பேர் ஒவ்வொரு கல்லூரிகளிலும் உள்ளனர் ?? (5 ற்கும் மேற்பட்டவர் கீழே )

(Download the Complaint for Full List.)

உதாரணத்திற்கு, Dhanalakshmi Srinivasan College of Engineering and Technology-Chengalpattu முழுநேர பேராசிரியராக பணிபுரிபவர்கள் அதே நேரத்தில் வேறு கல்லூரியிலும் முழுநேர பேராசிரியராக இருகின்றனர், தற்போதும் இந்த விபரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பார்க்க இயலும்

(Download the Complaint for Full List.)

ஈ) Unique Id இல்லாத பேராசிரியர்கள்:

ஒவ்வொரு பேராசிரியருக்கும் AICTE இணையத்தில் Unique Id கல்லூரி உள்ளீடு செய்யும் வழிமுறை உள்ளது, வேற எங்கேனும் பணியில் இருந்ததால் அந்த கல்லூரி பேராசிரியர் பட்டியலில் இணைக்க முடியாது, ஆனால் முறையான, AICTE வழங்கிய Unique IDஐ Entry செய்யாமல், போலித்தனமாக AU, AUU, AU1, Number1, AU1000 போன்று போலியான ID வழங்கி முழுநேர பேராசியராக இருப்பவர்கள் எண்ணிக்கை மட்டும் 13,891 பேர். இவர்கள் அங்கு உறுதியாக பணியில் இருக்கிறார்களா?, மேலே உள்ள பேராசிரியர்களும் தங்களின் தனிப்பட்ட ID வழங்காமல் போலியான IDகளை வழங்கியுள்ளனர். மேலும் அப்படி தனிப்பட்ட ID வழங்காதவர்கள் தகுதியான பேராசியரா என்பதும் சந்தேகமே.! எனவே முழுநேர பேராசிரியர்களுக்கு உரிய தனிபட்ட ID தரவுகள் வழங்கபடாமல் பணிபுரிவதாக சொல்லப்படும் 13,891 பேராசிரியராக பணிபுரிவதை ஆய்வு செய்து தகுதியான பேராசிரியர்களா என்பது விசாரிக்கப்பட வேண்டும்.

 

மேலே குறிப்பிட்டுள்ள இந்த முறைகேடுகள் மீது உடனடியாக கிரிமினல் மற்றும் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு தவறு செய்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். மேலும் இந்த ஆண்டு முதல் இது போன்று நடைபெறாமல் மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

 

– அறப்போர் இயக்கம்.


21 thoughts on “Anna University Affiliated Colleges Faculty Scam”

    • In Few Arts and Science College, they are collecting only cash (Fines for Attendance) excluding usual fees. Instructing the Faculties to involve in Mal-practise in Exam Halls for better results

      Reply
  1. கமிஷன் மட்டும் உயர்கல்வித்துறை அதிகாரிகள்,பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு கொடுத்தால் மட்டும் போதும் அண்டை மாநிலங்களில் பணியாற்றிய அனுபவ சான்றிதழ்கள் என்று போலியான சான்றிதழ்கள் உண்மையாக வலம் வந்து கல்வியியல் ,நர்சிங்,பொறியியல்……கல்லூரிகளின் முதல்வர்களாக, பேராசிரியர்களாக அங்கீகரிக்கப்பட்ட நபர்களாக வடிவேல் வெட்டாத கிணற்றுக்கு வெட்டியது போல ஆதாரங்களாக கிடைக்கின்றன தமிழ்நாட்டில் போலியாக வந்து போவதில்லை 5000–1,00,000/- வரை வெகுமதி ,போலியான சான்றிதழ்கள் உண்மையாக சித்தரிக்கப்பட்டு சமர்ப்பித்த ஆசாமிகளுக்கு மாத மாதம் ஊதியங்கள் வேற அவர்கள் அங்கு பணியாற்றாமல் வேறு பணியாற்றுவது போல வருகை பதிவேடு இருப்பதற்கு இது கடந்த 20 ஆண்டுகளாக கொடி கட்டி பறக்கும் ஊழல்கள்

    Reply
  2. Well done, arappor…. Further “May God help us from this type of fraudulent activities..”

    Reply
  3. அற ப்போர் இயக்கத்துக்கு வாழ்த்துக்கள். கல் குவாரி முறைகேடு புகார் தற்போது எந்த நிலையில் இருக்கிறது?

    Reply
  4. இப்பொழுதாவது புரிகிறதா ஏன் திராவிட மாடல் அரசு முதலமைச்சர் பல்கலைக்கழகத்தில் வேந்தராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆளுநரிடம் மோதினார் என்று.நல்ல முயற்சி அறம் வெல்லும்.

    Reply
  5. K.Muralibabu not having doctorate but he printed doctoral degree from Annamalai university (but Annamalai University till from its inception to till now Doctoral degree for ECE not issued).

    Reply
  6. Government failed to give quality education to the students. However, no action will be taken or for the name sake some colleges will be penalized.

    Reply
  7. If these are professors doing these malpractice , how can we expect students to have proper morale. Shame on those people. Those should be dismissed anf arrested.

    Reply
  8. Well done, Arrappor Iyakkam, for the meticulous investigation and finding.
    Also, try to enquire about the salary of the faculty in all the colleges you will get a shock.
    Even in Anna University’s 4 campuses Assistant professor-level teachers where getting 27000 per month with PhD qualifications, which is equal to arts university temporary faculty salary. Then how will they provide quality education to the students

    Reply
  9. Great job, Atleast you people have traced out such scam is going on in Tamil nadu education systems. Keep on going. Please interact with students those who are passing out from their college can give real feedback, please take a feedback from them too. So that you can find another scam in college infrastructure, flexibility to harass
    their own faculty in the name of college policy

    Reply
  10. I had worked in a college. On observation of some of the unethical practices, I chose to resign even though I did not have another job. The management, teachers, AICTE, NIRF, UGC everyone may be a partner in crime, Root cause- what makes the professors to signup for more than one college? AICTE approved salaries are not paid ? Who verifies it ?

    Reply
  11. Please give that data you downloaded from anna university to public.Its helpfull to analyse
    And release all the college which done.
    One more thing is it’s happening not only in professor also in associate professor and Assistant professor

    Reply

Leave a Comment