Total Views: 311
ஊழல் அதிகாரிக்கு பதவி உயர்வா?
அமைச்சர் அன்பரசன் மற்றும் தமிழக அரசின் முதன்மை செயலாளர் Hitesh Kumar IAS ஆகியோர் விளக்கம் அளிக்க அறப்போர் கோரிக்கை.
குடிசைகளில் இருந்த ஏழை மக்களுக்கு வீடு கட்டி தருவதாக சொல்லி டெண்டரில் செட்டிங் செய்து PST Empire நிறுவனம் 27 கோடி ரூபாய் ஊழல் செய்தது. தரமற்ற கட்டுமானத்தின் மூலம் மேலும் பல கோடி ஊழல் செய்தது. அந்த தரமற்ற கட்டுமானத்தை தடுக்க வேண்டிய அன்றைய EE சுந்தராஜன் அந்த ஊழலுக்கு உடந்தையாக கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அவருக்கு தற்பொழுது திமுக அரசு CEயாக பதவி உயர்வு கொடுக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்த ஊழல் குறித்து அறப்போர் ஆதாரங்களுடன் கொடுத்த புகார் இது வரை விசாரிக்கப்படவில்லை. கட்டிடத்தை பார்வையிட்ட TNUHBD அமைச்சர் அன்பரசன் IIT அறிக்கை வெளிவந்தவுடன் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம் என்று சட்டமன்றத்தில் ஆக்ரோஷமாக பேசினார்.
IIT அறிக்கை மிகவும் தெளிவாக இந்த கட்டிடத்தின் 90% பூச்சுவேலை தரமற்றது என்று குறிப்பிட்டுள்ளது. ஒரு மூட்டை சிமெண்ட்டுக்கு 5 மூட்டை மணல் கலப்பதற்கு பதிலாக 15 மூட்டை மணல் கலந்து பூச்சு வேலை செய்துள்ளார்கள் என்று ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. ஆனால் சட்டமன்றத்தில் கோஷமிட்ட அமைச்சர் அன்பரசன் அதற்கு பிறகு இந்த விஷயத்தில் மயான அமைதி நிலைக்கு சென்றுவிட்டார். இனி எப்பொழுது இது குறித்து வாய் திறப்பார் என்று கேட்டுக்கொண்டிருந்த நிலையில் தற்பொழுது ஊழலுக்கு துணை போன அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுக்க இருப்பதாக செய்திகள் வருகிறது.
அரசாங்கத்தின் முதன்மை செயலாளர் Hitesh Kumar IAS இதை எல்லாம் வேடிக்கை பார்க்க தான் அங்கே பதவியில் இருக்கிறாரா? அல்லது இந்த பதவி உயர்வு விஷயத்தில் அவருக்கும் தொடர்பு இருக்கிறதா?
ஏழை மக்கள் குடியிருக்கும் வீட்டில் ஊழல் செய்து கொள்ளை அடிப்பவர்களுக்கும் அந்த கொள்ளையர்களுக்கு துணை போகும் ஆட்களுக்கும் வெட்கமாகவே இருக்காதா?
PST நிறுவனம் செட்டிங் செய்து எடுத்த டெண்டர் – https://www.facebook.com/Arappor/photos/a.601231350015901/2209968079142212/
பூச்சுவேலை தரத்தில் ஊழல் – https://www.facebook.com/Arappor/photos/a.601231350015901/2205969419542078
IIT ஆய்வறிக்கை – ஊழல் ஆவணங்கள்: http://bit.ly/TNUHDBannex
#Arappor | #PSTempire | #TNUHD | #Anbarasan | #HiteshKumarIAS