Total Views: 679
48 கோடி முதலீடு 437 கோடி லாபம்
சென்னையில் 48 கோடி ரூபாய் மதிப்பில் 400 பேருந்து நிறுத்தங்கள் கட்ட டெண்டர் விடப்படுகிறது. இந்த டெண்டர் விடுவதற்கு 5 மாதங்களுக்கு முன்பாக மூன்று நிறுவனங்கள் (Skyrams, Shine, Finearts) துவங்கப்படுகிறது. இந்த நிறுவனங்கள் மாஜி அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்களால் துவங்கப்படுகிறது.
இந்த டெண்டரில் பங்கேற்கும் எந்த தகுதியும் இல்லாத இந்த 3 நிறுவனங்கள் மட்டுமே டெண்டரில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது. 8 பேக்கேஜ் டெண்டர்கள் இந்த மூன்று நிறுவனங்களுக்கும் பிரித்து அளிக்கப்படுகிறது. பஸ் நிறுத்தத்தில் 15 வருடங்களுக்கு விளம்பரம் செய்து சம்பாதிக்க வாடகையாக ஒரு நிறுத்தத்திற்கு 15000 ரூபாய் (எவ்ளோ பெரிய தொகை) கொடுக்கலாம் என்று இந்த மூன்று நிறுவனங்களும் சேர்ந்து முடிவு செய்து அறிவிக்கிறார்கள். என்னங்க இவ்ளோ குறைவாக கொடுத்தால் நாளைக்கு பிரச்சனை வருமே என்று மாநகராட்சி அதிகாரிகள் கெஞ்சி கூத்தாடியதை அடுத்து வருடம் 1.5 லட்சம் தருவதாக ஒப்புக் கொள்கிறார்கள். பழைய டெண்டரை ரத்து செய்யாமல் புதிய டெண்டர் போட்டுக் கொள்கிறார்கள்.
பஸ் நிறுத்தம் கட்ட தேவையான நிதியை கொண்டு வர பல்வேறு போலி நிறுவனங்கள் மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுகிறார்கள். கடந்த 6 ஆண்டுகளாக ஒவ்வொரு பேருந்து நிறுத்தம் மூலம் தலா 8 லட்சம் சம்பாதித்து வருகிறார்கள்.