Languageமொழி
PETITIONமனு

Withdraw the circular that weakens open e-tendering. Make open e-tenders mandatory above Rs 1 lakh. இ-டெண்டர் முறையை நீர்த்துப்போகச் செய்யும் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுங்கள்! ரூ. 1 லட்சத்துக்கு மேலான எல்லா ஒப்பந்தங்களும் ஓபன் இ-டெண்டரிலேயே விடப்பட வேண்டும்.

A Finance Department circular of 12 November 2026 lets departments skip e-tendering for small purchases. Add your name and ask the Government of Tamil Nadu to keep public spending open to everyone. சிறிய கொள்முதல்களுக்கு இ-டெண்டர் தேவையில்லை என்று 2026 நவம்பர் 12 அன்று நிதித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மக்கள் பணம் செலவாகும் ஒவ்வொரு ஒப்பந்தமும் எல்லோருக்கும் தெரிந்தே நடக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்த, உங்கள் பெயரையும் சேருங்கள்.

Sign the petitionமனுவில் கையெழுத்திடுங்கள்
0
people have signedபேர் ஏற்கெனவே கையெழுத்திட்டுள்ளனர்
Our goalநம் இலக்கு5,000
5–25% below the scheduled rate: what many open e-tenders have saved the public மதிப்பீட்டை விடக் குறைந்த விலையில் முடிந்த பல ஓபன் இ-டெண்டர்களால், மக்கள் பணம் இவ்வளவு மிச்சமாகியுள்ளது
Rs 1 lakhரூ. 1 லட்சம் the level above which we want every contract to be an open e-tender இதற்கு மேலான ஒவ்வொரு ஒப்பந்தமும் ஓபன் இ-டெண்டரிலேயே விடப்பட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை
99%+ of works under Rs 50 lakh are not emergencies ரூ. 50 லட்சத்துக்குள் உள்ள பணிகளில், அவசரம் என்று சொல்ல முடியாதவை இவ்வளவு

What has happenedஎன்ன நடந்தது?

On 12 November 2026, a Finance Department circular (Letter No. 1/FS/T/ Finance (Proc.Cell) Dept/2026) told all departments they may use the quotation system, without e-tendering, for low-value purchases: below Rs 25 lakh for all departments and below Rs 50 lakh for construction projects. 2026 நவம்பர் 12 அன்று நிதித்துறை ஒரு சுற்றறிக்கையை (கடித எண். 1/FS/T/ Finance (Proc.Cell) Dept/2026) வெளியிட்டது. குறைந்த மதிப்புள்ள கொள்முதல்களுக்கு இ-டெண்டர் இல்லாமல், விலைப்புள்ளி (quotation) வாங்கியே வேலையை முடித்துக்கொள்ளலாம் என்று எல்லாத் துறைகளுக்கும் அது கூறுகிறது. இந்த வரம்பு எல்லாத் துறைகளுக்கும் ரூ.25 லட்சம்; கட்டுமானப் பணிகளுக்கு ரூ.50 லட்சம்.

We believe this is a step backwards in the fight against corruption in public procurement. பொதுக் கொள்முதலில் ஊழலைத் தடுக்க நடக்கும் முயற்சிகளுக்கு இது பெரிய பின்னடைவு என்பது எங்கள் கருத்து.

Why this mattersஇது ஏன் முக்கியம்?

Mandatory End-to-End E-Tenders: Currently, only high-value tenders (above ₹25–50 lakh) require electronic filing, leaving thousands of smaller contracts (roads, storm drains) to "box tenders" or "limited tenders," which are easily rigged. We propose an amendment to the TN Transparency in Tenders Act to mandate end-to-end open e-tenders for all contracts above ₹1 lakh.

Emergency Tenders is not same as Low value Tenders:

It must be understood that more than 99% of the works under Rs 50 lakhs are not emergency or urgent works. Therefore, reason of emergency works does not hold good as a reason for switching tenders below Rs 50 lakhs as offline tenders. One of the arguments used by most Corrupt officials and politicians is that they are unable to do emergency works. Let us look at them.

1. Natural calamities / Emergencies: In cases where there is a natural calamity/ declared emergencies, there is no requirement for floating a tender at all as per Section 16 of the TN Transparency in Tenders Act. So such emergencies cannot be the reason for converting all tenders under 50 lakhs as offline tenders.

2. Urgent works to be done in a week’s time: The other issue could be works that needs to be addressed immediately in a matter of few days to 1 week. For such issues, the TN Transparency in tender rules 2000 allows for shorter window and need not follow the 15 day timeline. I am reproducing from section 20 of TN Transparency in Tender rules below

This minimum period shall be as follows.-

(a) for tenders upto rupees Ten Crore in value, fifteen days; and

(b) for tenders in excess of rupees Ten Crore in value, thirty days.

(2) Any reduction in the time stipulated as per sub-rule (1) has to be specifically authorized by an authority superior to the Tender Inviting Authority for reasons to be recorded in writing.

The reason for shorter window needs to be recorded in writing with approval from the higher official. It must be noted that any Department can even today float a 1 day to a 1 week open e tender if it is genuinely urgent.

3. Option of amending the TN Transparency in Tenders Act/ rules for low value tenders less than Rs 10 lakhs: If the Government still feels that the longer open e tender process is an issue, it can amend the TN Transparency in Tender rules to say that all tenders less than say Rs 10 lakhs can be floated with a minimum window of just 3 days. But it needs to be open e – tenders to ensure Transparency.

4. Other ways to deal with urgent works: Many companies like Indian oil will have a maintenance tender to address immediate repair/ urgent work like pump failure. Therefore, let us say there is a pothole beyond the defect liability period that needs to be repaired immediately on the receipt of the complaint. Such works in each department can be identified, listed and open e tenders can be floated on a piece rate for a period of 6 months to 1 year. Whenever, a repair work happens, the contractor who had won will be called to repair it and can be paid on every piece work done as per the agreed rate in the open e-tender.

All the above clearly demonstrates that if there is a will, there is a way. The question is the intention of the Government. If the intention is to weed out Corruption as well as address concerns of urgent/ other works, the above mechanisms are there before the Government to ensure open e tenders. Transparency is an important way to weed out Corruption in the long time.

எல்லா ஒப்பந்தங்களுக்கும் முழுமையான இ-டெண்டர் வேண்டும்: இப்போது ₹25–50 லட்சத்துக்கு மேலான பெரிய டெண்டர்கள் மட்டுமே இணையம் வழியாக விடப்படுகின்றன. சாலை, மழைநீர் வடிகால் போன்ற ஆயிரக்கணக்கான சிறிய வேலைகள் "பெட்டி டெண்டர்", "வரையறுக்கப்பட்ட டெண்டர்" என்ற பெயரில் விடப்படுகின்றன. இவற்றில் முறைகேடு செய்வது மிகவும் எளிது. அதனால், ₹1 லட்சத்துக்கு மேலான எல்லா ஒப்பந்தங்களும் தொடக்கம் முதல் முடிவு வரை ஓபன் இ-டெண்டர் வழியாகவே நடக்கும்படி, தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மைச் சட்டத்தில் (TN Transparency in Tenders Act) திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கோருகிறோம்.

அவசரத் தேவை வேறு, குறைந்த மதிப்பு வேறு:

ரூ.50 லட்சத்துக்குள் உள்ள பணிகளில் 99%-க்கும் மேலானவை அவசரப் பணிகளே அல்ல. எனவே "அவசரம்" என்பதைக் காரணமாகச் சொல்லி, இவற்றை ஆஃப்லைன் டெண்டருக்கு மாற்றுவது சரியல்ல. "அவசர வேலைகளைச் செய்ய முடியவில்லை" என்பது, முறைகேட்டில் ஈடுபடும் பல அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அடிக்கடி சொல்லும் காரணம். அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று பார்ப்போம்.

1. இயற்கைப் பேரிடர், அவசர நிலை: பேரிடர் அல்லது அறிவிக்கப்பட்ட அவசர நிலை ஏற்பட்டால், தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மைச் சட்டத்தின் பிரிவு 16-ன்படி டெண்டர் விடவே தேவையில்லை. ஆகவே, ரூ.50 லட்சத்துக்குள் உள்ள எல்லா டெண்டர்களையும் ஆஃப்லைனுக்கு மாற்றுவதற்கு இதைக் காரணமாகக் காட்ட முடியாது.

2. ஒரு வாரத்துக்குள் முடிக்க வேண்டிய வேலைகள்: சில நாட்களிலோ ஒரு வாரத்துக்குள்ளோ செய்து முடிக்க வேண்டிய வேலைகளும் வரலாம். அதற்கும் வழி இருக்கிறது. 15 நாள் அவகாசத்தை அப்படியே பின்பற்றாமல், குறைந்த அவகாசத்தில் டெண்டர் விட தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை விதிகள் 2000 அனுமதிக்கின்றன. அந்த விதிகளின் பிரிவு 20-ல் உள்ளதை கீழே தருகிறேன்.

குறைந்தபட்ச அவகாசம் பின்வருமாறு:-

(அ) ரூ.10 கோடி வரையிலான டெண்டர்களுக்கு 15 நாட்கள்;

(ஆ) ரூ.10 கோடிக்கு மேலான டெண்டர்களுக்கு 30 நாட்கள்.

(2) உட்பிரிவு (1)-ல் குறிப்பிட்டுள்ள அவகாசத்தைக் குறைக்க வேண்டுமானால், டெண்டர் அறிவிக்கும் அதிகாரிக்கு மேலுள்ள அதிகாரியிடம் தனியாக அனுமதி பெற வேண்டும்; அதற்கான காரணங்களை எழுத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அவகாசத்தைக் குறைப்பதற்கான காரணத்தை எழுத்தில் பதிவு செய்து, உயர் அதிகாரியின் ஒப்புதலைப் பெற வேண்டும். உண்மையிலேயே அவசரம் என்றால், எந்தத் துறையும் இன்றே 1 நாள் முதல் 1 வாரம் வரை அவகாசம் கொண்ட ஓபன் இ-டெண்டரை வெளியிட முடியும் என்பதைக் கவனிக்க வேண்டும்.

3. ரூ.10 லட்சத்துக்குக் குறைவான டெண்டர்களுக்குச் சட்டம்/விதிகளைத் திருத்தலாம்: ஓபன் இ-டெண்டருக்கு அதிக நாட்கள் ஆகிறது என்று அரசு இன்னும் கருதினால், ரூ.10 லட்சத்துக்குக் குறைவான டெண்டர்களுக்கு வெறும் 3 நாட்கள் அவகாசமே போதும் என்று விதிகளைத் திருத்திக்கொள்ளலாம். ஆனால், வெளிப்படைத்தன்மை உறுதியாக இருக்க, அவையும் ஓபன் இ-டெண்டராகவே இருக்க வேண்டும்.

4. அவசர வேலைகளுக்கு வேறு வழிகள்: இந்தியன் ஆயில் போன்ற பல நிறுவனங்கள், பம்ப் பழுது போன்ற உடனடிப் பழுதுகளைச் சரிசெய்வதற்காக ஒரு பராமரிப்பு டெண்டரை முன்கூட்டியே விட்டு வைத்திருக்கும். இதை ஒரு எடுத்துக்காட்டால் பார்ப்போம். ஒப்பந்ததாரரின் பராமரிப்புப் பொறுப்புக் காலம் (defect liability period) முடிந்த பிறகு சாலையில் குழி விழுந்து, புகார் வந்ததும் உடனே சரிசெய்ய வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்படிப்பட்ட பணிகளை ஒவ்வொரு துறையும் முன்கூட்டியே அடையாளம் கண்டு பட்டியலிடலாம். பிறகு 6 மாதம் முதல் 1 ஆண்டு வரைக்கும், ஒவ்வொரு வேலைக்கும் இவ்வளவு என்று விலை நிர்ணயிக்கும் (piece rate) ஓபன் இ-டெண்டரை விடலாம். பழுது வரும்போதெல்லாம், அந்த டெண்டரில் வென்ற ஒப்பந்ததாரரை அழைத்து வேலையைச் செய்யச் சொல்லி, ஓபன் இ-டெண்டரில் முடிவான விலைப்படி ஒவ்வொரு வேலைக்கும் பணம் கொடுக்கலாம்.

விருப்பம் இருந்தால் வழி பிறக்கும் என்பதையே இவை அனைத்தும் காட்டுகின்றன. இங்கே கேள்வி, அரசின் எண்ணம் என்ன என்பதுதான். ஊழலை ஒழிப்பதும், அவசர வேலைகள் போன்ற பிற சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதும்தான் நோக்கம் என்றால், ஓபன் இ-டெண்டரை உறுதிசெய்யும் வழிகள் அரசின் கையிலேயே உள்ளன. நீண்ட காலத்தில் ஊழலை வேரறுக்கும் முக்கியமான வழிகளில் வெளிப்படைத்தன்மையும் ஒன்று.

What we are asking the Government to doஅரசிடம் நாங்கள் வைக்கும் கோரிக்கைகள்

  1. Immediately withdraw the Finance Department circular dated 12.11.2026. நிதித்துறையால் 12.11.2026 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
  2. Amend the TN Transparency in Tenders Act and Rules to mandate end-to-end open e-tenders for all contracts above Rs 1 lakh. ரூ.1 லட்சத்துக்கு மேலான எல்லா ஒப்பந்தங்களும் தொடக்கம் முதல் முடிவு வரை ஓபன் இ-டெண்டரிலேயே நடக்கும்படி, தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மைச் சட்டத்தையும் விதிகளையும் திருத்த வேண்டும்.

Read the documentsஆவணங்களைப் படியுங்கள்

The letter Arappor Iyakkam sent to the Chief Minister, and the Finance Department circular we want withdrawn. அறப்போர் இயக்கம் முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதமும், நாம் திரும்பப் பெறக் கோரும் நிதித்துறை சுற்றறிக்கையும்.