
பழுதடைந்த மற்றும் வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த சாலைகளை புனரமைக்க, சென்னை மாநகராட்சி, டிசம்பர் 2021 மற்றும் ஜனவரி 2022ல் இரண்டு நடைபாதைகள் உட்பட 1656 சாலைகள் புனரமைக்க, 188+ ஒப்பந்தங்களை போட்டுள்ளது, அந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு சுமார் 213கோடி, அதில் உங்கள் பகுதி சாலையும் இருக்கிறதா?, அவைகளின் தற்போதைய நிலை என்ன?
2019 - 20ல் சென்னையின் 15 மண்டலங்களில் 1872 சாலைகள் மற்றும் 88 நடைபாதைகள் சீரமைப்பிற்காக சுமார் 355.95 கோடி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டது, 2020ல் பெரும்பாலான சாலைகளும் சீரமைப்பட்டது, அதில் உங்கள் பகுதி சாலையும் இருக்கிறதா?, அவைகளின் தற்போதைய நிலை என்ன?.