சென்னை மாநகராட்சி பணிகளுக்கு டெண்டர் விண்ணப்பிக்க வருபவரை மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து ஒரு கான்ட்ராக்டர் தடுக்கிறார். இது MLA நிதியில் செய்யப்படும் வேலை என்றால் அந்த பகுதி MLAவின் உதவியாளரிடம் பேச சொல்கிறார்.

இப்படி மிரட்டல் விடுக்கும் கான்ட்ராக்டர் மீது சென்னை மாநகராட்சி ஆணையர் இது வரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. நியாயமான ஆணையர் என்றால் ரவுடித்தனம் செய்த அந்த கான்ட்ராக்டரை Blacklist செய்திருக்க வேண்டுமே. ஏன் செய்யவில்லை?

இந்த கான்ட்ராக்டருக்கு வில்லிவாக்கம் திமுக MLA ரங்கநாதன் அவர்களுக்கும் என்ன தொடர்பு என்று MLA விளக்கம் கொடுப்பாரா? தொடர்பு இல்லை என்றால் தன்னுடைய தொகுதி பணியில் தலையிட்ட இந்த கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுப்பாரா?

சென்னை மாநகராட்சியில் டெண்டர் முறைகேடுகள் எதுவும் நடைபெறுவதில்லை என்று கூறிய உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்?

இந்த விஷயத்தில் ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளின் மவுனம் நமக்கு உணர்த்துவது என்ன?

51600696_1315239121948450_802338725987090432_n.jpg