அரசு அதிகாரிகள் மீது ஊழல் நடவடிக்கை எடுக்க அனுமதி கொடுப்பது குறித்து உயர் அதிகாரி 4 மாதத்திற்குள் முடிவு எடுக்க வேண்டுமாம். உயர் அதிகாரி ஆதரவு இல்லாமல் அந்த துறையில் ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையில் அவர் எப்படி அவருக்கு கீழ் வேலை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கொடுப்பார்? அவர் 4 மாத காலத்திற்குள் முடிவு எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் போய் அனுமதி வாங்க வேண்டுமாம். இப்படி ஒவ்வொரு அதிகாரி மீதும் ஊழல் நடவடிக்கைக்காக நீதிமன்றம் செல்ல துவங்கினால் ஊழல் எப்படி குறையும்? இதற்கு எதற்கு வருடம் 55 கோடி ரூபாய் செலவில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை. ஊழல் அதிகாரிகளை பாதுகாக்க திட்டமிட்டு சட்டத்திருத்தம் கொண்டு வந்து வேலை செய்யும் மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் பாராட்டுக்கள்.

Source: https://www.thehindu.com/news/cities/chennai/a-dip-in-graft-cases-thanks-to-amended-act/article27528045.ece

62229329_1406300689508959_883312805275500544_n.jpg