சென்னையின் குடிசை பகுதி மக்களுக்கு மறுக்கப்படும் அரசு சேவைகளை அவர்களுக்கு பெற்றுத்தரும் நோக்கில் அறப்போர் இயக்கம் மனு எழுதும் நிகழ்வை தொடர்ந்து பல்வேறு குடிசை பகுதி மக்களிடையே நடத்தி வருகிறது. இந்த வாரம் முழுவதும் சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியில் அறப்போர் இயக்க தன்னார்வலர்கள் உதவியுடன் இந்த முகாம் நடைபெற்றது. தொடர்ந்து சென்னை முழுவதும் இந்த முகாம்கள் நடக்க இருக்கிறது. இந்த முகாம்களில் கலந்து கொண்டு உங்கள் பங்களிப்பை தர விரும்புபவர்கள் 87782 32276 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இணைந்து கொள்ளலாம்.

1054f8e1-568f-42d2-8462-f7fd639121cf.jpg