![](https://www.arappor.org/blog/blog/storage/app/media/cropped-images/ae1f419f-a0ea-498f-ab5b-5cee1df280bc-0-0-0-0-1548577410.jpg)ae1f419f-a0ea-498f-ab5b-5cee1df280bc.jpg வீடில்லாதோருக்கு shelter கட்ட 60 லட்ச ரூபாய் செலவில் 9 டெண்டர்கள் கோரப்படுகிறது. வழக்கம் போல இந்த டெண்டர்கள் யாருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்து அவர்களிடம் விண்ணப்பம் பெறப்படுகிறது. ஆனால் இந்த முறை வேறு சில கான்டராக்டர்கள் தாங்களும் விண்ணப்பிக்க முன்வருகிறார்கள். ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட அதிகபட்ச விலையை விட இவர்கள் குறைவாக டெண்டர் தொகையை குறிப்பிட்டதால் கடைசி தேதி முடிந்த பிறகும் டெண்டர் முடிவுகளை அறிவிக்காமல் மாநகராட்சி இழுத்தடிப்பதாக புகார் வருகிறது. மேலும் குறைவாக டெண்டர் தொகை குறிப்பிட்ட கான்ட்ராக்டர்களிடம் அவர்கள் டெண்டரை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அழுத்தம் கொடுப்பதாகவும் புகார் வருகிறது. இது குறித்து அறப்போர் இயக்கம் சார்பாக சென்னை மாநகராட்சிக்கு புகார் அனுப்பப்பியதை அடுத்து இந்த 9 டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெண்டர்களை ரத்து செய்ததின் மூலம் இந்த புகார்கள் உண்மை என்பதும் தெரிய வருகிறது.

வெளிப்படையாக டெண்டர் விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையரும் உள்ளாட்சி துறை அமைச்சரும் மீண்டும் மீண்டும் சொல்வதை செயல்பாட்டில் காட்டுவதற்கு அவர்களுக்கு மனம் வரவே இல்லை.