2000 Crore Tender for OpticalFibre Connectivity to be completed within 9 months?

9 மாதங்களில் வேலையை முடிக்க வேண்டும் ஆகையால் பெரிய நிறுவனங்கள் மட்டும் டெண்டர் எடுக்கும் வகையில் டெண்டர் விதிகளை மாற்றியுள்ளதாக அமைச்சர் உதயகுமார் பிரச்சனையில் இருந்து நழுவ பார்க்கிறார்.

டெண்டர் தேதிகள் நான்கு முறை மாற்றப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன? டெண்டர் இழுபறியில் இருக்கும் போது இந்த துறையின் அதிகாரி சந்தோஷ் பாபு IAS மாற்றப்பட காரணம் என்ன?

திட்டமிட்டபடி ஜனவரி மாதம் டெண்டர் முடித்திருந்தால் 11 மாத டெண்டரை முடிக்க 14 மாதங்கள் காலம் இருந்திருக்கும். ஆனால் டெண்டர் செட்டிங் செய்வது ஜனவரி மாதம் வெளிவந்ததும் டெண்டர் இறுதி நாளை தள்ளிக்கொண்டே போய், இப்பொழுது டெண்டர் தள்ளி போனதையே காரணமாக கூறியும் இன்னும் 9 மாதங்கள் தான் செயல்படுத்த உள்ளது என்றும் அதற்காக தான் turnover , அனுபவம் போன்றவற்றை 300% அதிகரித்துள்ளோம் என்பதும் அமைச்சர் கொடுக்கும் அல்வா! டெண்டர்களை செட்டிங் செய்து பெரிய நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது மூலம் இதில் ஒரு மிகப்பெரிய ஊழல் அரங்கேற இருப்பது தெள்ளத்தெளிவாகிறது பெரிய நிறுவனங்களுக்கு 2000 கோடி டெண்டரை உறுதி செய்வதால் யாருக்கெல்லாம் பயன் கிடைக்குமோ அவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும். செட்டிங் செய்யப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட வேண்டும். இதற்கு காரணமான அதிகாரிகள் உடனடியாக பதவி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.

2000CroreTenderSetting