Arappor Iyakkam

Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.

Category: Anti Corruption

This is the video for which the fake case was filed on Arappor

This is the video for which the fake case was filed on Arappor

இந்த வீடியோவை பதிவு செய்த குற்றத்திற்காக மாநகராட்சி ஊழியர் கொடுத்த புகாரில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் மீது FIR பதிவு செய்துள்ளது சென்னை காவல்துறை. 120 ரூபாய் ஆற்று மணல் போடுவதாக அதிக விலைக்கு டெண்டர் எடுத்துவிட்டு 50 ரூபாய் Msand பயன்படுத்தி மீதி 70 ரூபாயை கொள்ளை அடித்தது யார் என்று கேட்டால் பொய் வழக்கு போடுவீர்களா ஆபீசர்ஸ் ?

பொய் வழக்கு போட்டு பயம் காட்டும் இந்த ஊழல்வாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த வீடியோவை அதிக அளவில் பகிருங்கள். எதை மக்கள் பார்க்க கூடாது என்று ஊழல்வாதிகள் பதறுகிறார்களோ அதை அதிகமான மக்களுக்கு கொண்

Fake Case on Arappor for MSand Expose on Times of India today.

Fake Case on Arappor for MSand Expose on Times of India today.

உங்களால் போலி புகார் கொடுத்து வழக்கு பதிய மட்டும் தான் முடியும் ஆபிசர்ஸ். ஆனா எங்களால் மேலும் மேலும் பல ஊழல்களை ஆதாரங்களுடன் மக்கள் முன் அம்பலப்படுத்த முடியும். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உங்களை சிறையில் அடைக்க முடியும். அது வரை அறப்போர் தொடரும்... வழக்கு போட்டு பயம் காட்டும் சின்ன புள்ளைங்க விளையாட்டு எல்லாம் வேற பக்கம் விளையாடுங்க.

Read here: https://timesofindia.indiatimes.com/city/chennai/fir-against-arappor-iyakkam-convenor-for-m-sand-expose/articleshow/72987062.cms

How did Sasikala exchange Rs 237 crores of old notes through contractor

How did Sasikala exchange Rs 237 crores of old notes through contractor

சசிகலா 237 கோடி கருப்பு பணத்தை மாற்றியது எப்படி? How did Sasikala exchange Rs 237 crores of old notes through contractor T. S. KUMARASAMY of Christy Friedgram.

Watch video here: https://www.youtube.com/watch?v=LrRNuSder_o
Nakkeeran covers MSand Scam in Chennai Corporation

Nakkeeran covers MSand Scam in Chennai Corporation

நான் உங்கிட்ட எவ்ளோ கொடுத்தேன்? 120 ரூவா குடுத்தீங்க.

என்ன வாங்கிட்டு வர சொன்னேன்? ஆத்து மணல் 1 கன அடி வாங்கிட்டு வர சொன்னீங்க.

கடைக்காரன் கிட்ட கேட்டியா? கேட்டனே..

என்ன சொன்னான்? ஆத்து மணல் கன அடி 120 ரூவா சொன்னான்.

நீ என்ன பண்ண? நான் Msand வாங்கிட்டேன்.

Msand விலை என்ன? 1 கன அடி 50 ரூவா.

சரி..நான் உங்கிட்ட 120 ரூவா குடுத்தேன்ல. அதுல 50 ரூவாய்க்கு Msand இங்கே இருக்கு. மீது 70 ரூவா எங்கே இருக்கு..? அதான்னே இது..!

மேலும் விவரங்களுக்கு https://youtu.be/2OpNGRMNtNs

ChennaiCorruptionCorporation

Benami Queen Sasikala

Benami Queen Sasikala

ஜெயலலிதாவுக்கு பினாமியாக இருந்து தற்பொழுது பல பினாமிகள் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்த்து சிறையில் இருக்கும் சசிகலா.

தமிழக அமைச்சர்கள் மருத்துவமனை வெளியே காவலுக்கு நின்று ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் ஜுஸ் குடித்தார் என்று பேட்டி கொடுத்துக் கொண்டு இருக்கும் போது மருத்துவமனை உள்ளே ஜெயலலிதாவும் சசிகலாவும் இணைந்து தமிழக மக்களிடம் இருந்து கொள்ளை அடித்த 1600 கோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்து எந்த எந்த சொத்துக்களை எந்த பினாமிகளின் பெயரில் வாங்குவது என்று திட்டம் போட்டு வேலை செய்துள்ளார் சசிகலா.

Read here: https://www.thehindu.com/news/national/...

How Sasikala bought properties worth Rs 1674.50 crores using black money

How Sasikala bought properties worth Rs 1674.50 crores using black money

சசிகலா 1674 கோடி கருப்பு பணத்தை வைத்து சொத்து வாங்கியது எப்படி? ? How Sasikala bought properties worth Rs 1674.50 crores using black money

Watch Video here: https://www.youtube.com/watch?v=Jw9Pt7YWweQ

Sasikala's Blackmoney purchases worth 1600 Crores.

Sasikala's Blackmoney purchases worth 1600 Crores.

தமிழக முதல்வர் மரண படுக்கையில் இருந்த போது அவரது தோழி பினாமி குயின் சசிகலா தன்னிடம் இருந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மூலம் சொத்துக்களை வாங்கி குவித்துக் கொண்டு இருந்தார். பிறகு அவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தமிழக முதல்வராக தேர்ந்தெடுத்தார்.

Madras HC: Can DVAC do full Investigation without FIR?

Madras HC: Can DVAC do full Investigation without FIR?

Madras High court is looking deeper into whether DVAC can do a full fledged investigation, in the guise of preliminary inquiry, without registering a FIR.

Read here: https://www.thehindu.com/news/national/tamil-nadu/hc-to-examine-whether-dvac-can-give-clean-chit-to-ministers-without-registering-fir/article30342891.ece

Files related to Tenders rushed to Ripon Buildings

Files related to Tenders rushed to Ripon Buildings after Arappor Expose on MSand Scam

120 ரூபாய்க்கு ஆற்று மணல் போட்டு கட்டுவோம் என்று காசு வாங்கி 50 ரூபாய் Msand வைத்து காங்கிரீட் போட்டு மீதம் 70 ரூபாயை அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திய விவகாரம் பூதாகாரமாக வெடிக்கிறது.

ஆவணங்கள் அனைத்தையும் ஆட்டோ பிடித்து உடனே அனுப்பும்படி உத்தரவு.

Chennai Corporation forms a new committee to review rates after Arappor Expose

Chennai Corporation forms a new committee to review rates after Arappor Expose on MSand Scam.

3 வருடங்களாக ஆற்று மணல் விலையில் Msand வாங்கி நடந்த சென்னை மாநகராட்சி ஊழலை தடுக்க விலை பட்டியலை திருத்தி அமைக்க கமிட்டி அமைத்த மாநகராட்சி ஆணையருக்கு பாராட்டுக்கள். ஆனால் 3 வருடங்களாக கொள்ளையடிக்க காரணமான அதிகாரிகளை விசாரித்து தண்டிக்காமல் அவர்களை வைத்தே கமிட்டி அமைந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கும் செயல்.

ஊழலுக்கு துணை போன மாநகராட்சி அதிகாரிகள் அல்லாத தன்னிச்சையான கட்டிட வல்லுநர்கள் குழுவை அமைத்து தற்பொழுது கிடைக்கும் Msand விலைக்கு ஏற்ப டெண்டர் விலை பட்டியலை நிர்ணயிக்க அறப்போர் இயக்கம் கேட்டுக் க