Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.
Please join Arappor's Twitter page:
Twitter.com/arappor
ஒவ்வொரு ஊழல் புகாருக்கு பிறகும் நமது முகநூல் பக்கத்தின் மீதான் தாக்குதல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்போழுது மீண்டும் ஒரு போலி புகார் (Intellectual Propert rights) மூலம் அடுத்த ஒரு வாரத்திற்கு நமது பக்கத்தில் போடப்படும் பதிவுகள் followers timeline யில் தெரியாத வகையில் block செய்துள்ளார்கள். முகநூல் பக்கத்தை தடை செய்யவும் வாய்ப்புகள் அதிகம். அனைவரும் அறப்போர் பக்கத்தை see first optionல் வைக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.
ஏழை மக்களுக்கு உணவு கொடுப்பதில் வெறும் பில் மட்டும் போட்டு 1500 கோடி ஊழல் செய்துள்ளார்கள். ஏழை மக்கள் மீது அக்கறையுள்ள கட்சிகளும் இயக்கங்களும் இது குறித்து அரசுக்கு உடனடியாக அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
1500 கோடி ஊழல் விளக்க வீடியோ: https://youtu.be/Pfe5VrmWPQY
Join us tomorrow to demand action against the corrupt people behind the 1500 Crore PDS scam.
நியாயவிலைக்கடையும்_அநியாய_ஊழலும்
Address: 120 A Rukmani Lakshmipathi Salai Near Egmore Govt Eye hospital. Contact: 7200020099
ஊழல் விளக்க வீடியோ: https://youtu.be/Pfe5VrmWPQY
நாளை சந்தித்து விவாதிப்போம். நாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் ஊழலை தடுக்க எந்த முயற்சியும் எடுக்காத போது நாம் களமிறங்கி நமது எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
**Sunday | Jan26 | 5Pm | Arappor Office**
Arappor / PDS Scam / Ration Shop / Civil Supplies Scam / 1500 Crore Scam / Tamilnadu
ஏழை மக்களுக்கு சோறு போடும் துறை சார் இது. இந்த துறையில் 1480 கோடி கொள்ளை அடிக்க அனுமதித்தது யார்? ஆளுங்கட்சி அரசியல்வாதிகளா அல்லது அரசு அதிகாரிகளா? இல்லை இவர்கள் இருவரின் ஊழல் கூட்டணியா? இவர்கள் துணை இல்லாமல் கிறிஸ்டி நிறுவனம் கொள்ளை அடிக்க முடியுமா?
1500 கோடி ஊழல் விளக்க வீடியோ: https://youtu.be/Pfe5VrmWPQY
Arappor / PDS Scam / Ration Shop / Civil Supplies Scam / 1500 Crore Scam / Tamilnadu
கிறிஸ்டி நிறுவனம் பில் பிரிண்ட் போடுவது தவிர வேறு எந்த வேலையும் செய்யவில்லை. ஆனால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை ஒரு கிலோவுக்கு கிட்டத்தட்ட 10 ரூபாய் அவர்களுக்கு தமிழக அரசால் கொடுக்கப்படுகிறது. இதே நிலை தான் பாமாயில் மற்றும் பருப்பு வாங்குவதிலும் தொடர்கிறது. இதன் மூலம் தமிழக அரசு கிட்டத்தட்ட 1500 கோடி ரூபாய் அதிகமாக செலவு செய்துள்ளது. இந்த அதிக செலவுக்கான காரணம் என்ன என்று அந்த துறை அமைச்சரும் அதிகாரியும் உடனடியாக பத்திரிக்கையாளர்களை அழைத்து விளக்கம் கொடுக்க வேண்டும். அவர்கள் அமைதியாக இருக்கும் பட்சத்தில் இந்த 1500 கோடி ர
ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கினால் தான் மூன்று வேளை சாப்பாடு என்ற நிலையில் இருக்கும் ஏழை மக்களின் வயிற்றில் அடித்து கொள்ளையடிக்கும் இவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை மக்கள் மத்தியிலும் நீதிமன்றங்களிலும் நமது கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்போம். அறப்போர் தொடரும்...
Explainer Video: https://www.youtube.com/watch?v=Pfe5VrmWPQY
Arappor / PDS Scam / Ration Shop / Civil Supplies Scam / 1500 Crore Scam / Tamilnadu
தமிழகத்தில் ரேஷன் துறையான சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் நடந்த ரூ 1500 கோடி ஊழலின் வெளியீடு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு.
Watch Video Here: https://www.youtube.com/watch?v=Cegp1gtmamc
Arappor / PDS Scam / Ration Shop / Civil Supplies Scam / 1500 Crore Scam / Tamilnadu